Regional02

தடுப்பூசி தீர்ந்ததால் ஏமாற்றம் - உதகை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள் :

செய்திப்பிரிவு

உதகை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்துவதற்காக ஏராளமான மக்கள், காலை 8 மணி முதலே திரண்டனர்.

சில மணி நேரங்களில் தடுப்பூசி தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தடுப்பூசி குறித்து உரிய தகவல்களை மக்களுக்கு அளிக்க வேண்டும் என மருத்துவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உதகை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ரவிசங்கர் கூறும்போது, ‘‘இன்று (நேற்று) 100 தடுப்பூசிகள் மட்டுமே மருத்துவமனைக்கு வந்தன. இதில், 29 பேருக்கு முதல் தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. மீதமுள்ள தடுப்பூசி, 2-ம் தவணையாக தடுப்பூசி செலுத்தவந்தவர் களுக்கு செலுத்தப் பட்டுவிட்டது.

தடுப்பூசி முடிந்து விட்டது என தெரிவித்தும், பலர் காத்திருந்தனர். தடுப்பூசி வந்தால் தெரிவிக்கப்படும்’’ என்றார். வீடுவீடாக குப்பை சேகரிக்க வரும் வாகனத்தில் தடுப்பூசி செலுத்தும் இடம், நாள் மற்றும் தடுப்பூசி இருப்பு குறித்து தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT