Regional02

நீலகிரி அதிமுக சார்பில் மக்களுக்கு நிவாரணம் :

செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதன்பேரில், நீலகிரி மாவட்டம் உதகை நகரம் 11-வது வார்டுக்கு உட்பட்ட 500 பேருக்கு அதிமுக சார்பில் நேற்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு உதகை நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத், முன்னாள் எம்.பி. கே.ஆர்.அர்ஜூணன், முன்னாள் எம்எல்ஏ சாந்தி அ.ராமு, அரசு வழக்கறிஞர் பாலநந்தகுமார் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர். 15 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT