Regional02

100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

செங்கல்பட்டில் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கத் தலைவரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை தலைவருமான டி.கோவிந்தன் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இதில் பழங்குடியினர், இதர பிரிவினர் வாரியாக பட்டியல் தயாரித்து வேலை வழங்க வேண்டும். இதற்கான ஒரு நாள் ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கே.வாசுதேவன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பி.சண்முகம் ஜி.மோகனன், வழக்கறிஞர் முனிசெல்வம் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

SCROLL FOR NEXT