சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் யோகா செய்த நூறு நாள் வேலை உறுதி திட்டத் தொழிலாளர்கள். 
Regional02

நூறு நாள் திட்ட தொழிலாளர்களுடன் : யோகா செய்த சிவகங்கை ஆட்சியர் :

செய்திப்பிரிவு

விருட்சாசனம், சக்ராசனம், பாத அஸ்டாசனம் உள்ளிட்ட 12 வகை ஆசனங்கள், கபாலபாதி, நாடிசுத்தி, பஸ்த்ரிகா உள்ளிட்ட 3 வகை மூச்சு பயிற்சிகளை மேற்கொண்டனர். ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், உமா மகேஸ்வரி, பழனியம்மாள், மாஸ்கோ யோகா ஆசிரியர் பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரி டீன் ரேவதி, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT