தென் தமிழகத்தில் முதன்முறை யாக கூடங்குளம் அரசு மருத்துவ மனையில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில், கூடம் அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கின. ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் இந்த உற்பத்தி கூடத்தை மாவட்ட நிர்வாகம் அமைக்கிறது. இதன்மூலம் 150 ஆக்சிஜன் படுக்கைகளுக்கு மருத்துவ ஆக்சிஜனை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதுபோல சேதுராயன்புதூரில் ஒருநாளைக்கு 2,400 கியூபிக் மீட்டர் மருத்துவ ஆக்சிஜன், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 1,680 கியூபிக் மீட்டர் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இன்னும் 10 நாட்களுக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத் தில் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக் கையாக 11 சிகிச்சை மையங்களில் 4,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருக்கின்றன.