திருநெல்வேலி மீனாட்சிபுரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய தந்தை மற்றும் மகனைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். படம்: மு.லெட்சுமிஅருண். 
Regional01

தாமிரபரணியில் மூழ்கிய தந்தை, மகன் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் இறந்த உறவினரின் 10-ம் நாள் சடங்கில் பங்கேற்ற தந்தை, மகன் தாமிரபரணியில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார சாமி என்பவரது தாயார் கடந்த சில நாட்களுக்குமுன் மரணமடைந்தார். அவருக்கு 10-ம் நாள் காரியம் செய்ய உறவினர்களுடன் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு முத்துக்குமாரசாமி சென்றார். அங்கு சடங்குகள் முடித்து அனைவரும் ஆற்றில் குளித்தனர்.

முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கரை திரும்பிய நிலையில், அவரது உறவினரான சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன், அவரது மகன் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறிய சுவாமிநாதன் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்.

அவரை காப்பாற்ற அவரது மகன் சங்கர சுப்பிரமணியனும் மற்றொரு உறவினரும் முயற்சித் தனர். ஆனால் அவர்களையும் தண்ணீர் இழுத்துச் சென்றது. இதைப்பார்த்து கரையில் இருந்தவர்கள் ஆற்றுக்குள் குதித்து அவர்களை காப்பாற்றச் சென்றனர். ஒருவரை மட்டுமே மீட்க முடிந்தது. சுவாமிநாதனும், சங்கர சுப்பிரமணியனும் ஆற்றில் மூழ்கினர்.

தேடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT