Regional02

எஸ்எம்ஏ பள்ளியில் தந்தையர் தின விழா :

செய்திப்பிரிவு

பாவூர்சத்திரம் அருகே அடை க்கலப்பட்டணம் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளியில் தந்தையர் தின விழா இணையவழியில் கொண்டாடப் பட்டது.

‘என்னுடைய தந்தை என்னுடைய ஹீரோ’ என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான 48 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் பரிசளித்தார். அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் கலைச் செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT