Regional02

‘சசிகலாவுடன் உரையாடுபவர்களை : அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும்’ :

செய்திப்பிரிவு

அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு மண்டல ஆலோசனைக் கூட்டம் தி.மலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. வேலூர் மண்டல செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அதிமுக செயலாளராக அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், “சசிகலா நடராஜனுடன் உரையாடி அதிமுகவின் புகழுக்கு களங்கும் விளைவிப்பவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்த வர்களுக்கு இணை நோயால் உயிரிழந்தனர் என இறப்பு சான்றிதழ் வழங்கி நியாயமாக கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் கிடைக்காமல் தடுக்கும் தமிழக அரசை கண்டித்தும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT