Regional01

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் - தீ விபத்தில் சேதமடைந்த பாகங்கள் புதுப்பிக்கும் பணி தீவிரம் :

செய்திப்பிரிவு

மேட்டூர் அனல் நிலையத்தில் தீ விபத்தின்போது, சேதமடைந்த பாகங்கள் அகற்றப்பட்டு, புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அனல் மின் நிலையத் தில் உள்ள பழைய அனல் மின் நிலையத்தில், கடந்த 18-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், அனல் நிலைய எரிகலனுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் பாதை, கன்வேயர் பெல்ட் மேடை உள்ளிட்டவை தீயில் சேதடைந்தன.

இதனால், பழைய அனல் மின் நிலையத்தில் 840 மெகா வாட் மின் உறுபத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது. எனினும், அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அலகில் மட்டும் தற்போது, உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பழைய அனல் மின் நிலையத்தில் தீ விபத்தின்போது சேதமடைந்த கன்வேயர் பெல்ட் மேடை மற்றும் பாதை உள்ளிட்டவை முற்றிலும் அகற்றப்பட்டு, புதுப்பித்தல் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக அனல் மின் நிலைய அதிகாரிகள் கூறும்போது,“பழைய அனல் மின் நிலையத்தில் சேதமடைந்த பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டன. அங்கு புதுப்பித்தல் பணி ஒப்பந்ததாரர் மூலம் தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.ஓரிரு மாதங்களுக்குள் பணிகள் முடிவடைந்துவிடும் என எதிர் பார்க்கிறோம்” என்றனர்.

SCROLL FOR NEXT