Regional02

கரோனா விதிமீறல் ரூ.1.22 கோடி அபராதம் வசூல் :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக் கைகளை மீறியோரிடமிருந்து இதுவரை ரூ.1.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு வருவாய், காவல், பொது சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணி யாமல் வெளியே வந்த 55,204 பேருக்கும், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்காத 2,073 பேருக்கும், பொது இடங்களில் எச்சில் துப்பியதாக 10 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு அவர் களிடமிருந்து ரூ.1.22 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT