Regional01

ஈரோட்டில் 870 பேருக்கு கரோனா பாதிப்பு : சேலத்தில் 517 பேருக்கு தொற்று

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 870 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று 870 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றவர்களில், 1451 பேர் குணமடைந்துள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட அளவில் 8326 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 517 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 170 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்கள் 20 பேர் என மாவட்டம் முழுவதும் 517 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT