Regional01

விலைவாசியை கட்டுப்படுத்தக் கோரி கம்யூ.கள் சார்பில் - நெல்லையில் 12 இடங்களில் எதிர்ப்பியக்கம் :

செய்திப்பிரிவு

அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுப்படுத்தக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் 12 இடங்களில் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் எதிர்ப்பியக்கம் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.7,500 மற்றும் உணவுப் பொருட்கள் 6 மாத காலத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய எதிர்ப்பியக்கத்துக்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூன் 28, 29, 30 ஆகிய தேதிகளில் 12 இடங்களில் எதிர்ப்பியக்கம் நடத்தப்படுகிறது.

ஜூன் 28-ம் தேதி பாளையங் கோட்டை, அம்பாசமுத்திரம், வள்ளியூர், முக்கூடல் ஆகிய இடங்களிலும், ஜூன் 29-ம் தேதி திருநெல்வேலி, களக்காடு, வீரவநல்லூர், பணகுடி ஆகிய இடங்களிலும், ஜூன் 30-ம் தேதி மேலப்பாளையம், நாங்குநேரி, திசையன்விளை, விக்கிரமசிங்க புரம் ஆகிய இடங்களிலும் எதிர்ப்பியக்கம் நடைபெறுகிறது என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT