தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோயில் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாத சம்பளமின்றி பணியாற்றும் பூசாரிகள், கோயில் பணியாளர் கள் 106 பேருக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 15 வகையான மளிகைப் பொருட் களை அமைச்சர் பெ. கீதா ஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி சார் ஆட்சியர் (பொறுப்பு) செல்வவிநாயகம், திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.