திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் 2-வது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இங்குள்ள, 2 அணு உலைகளிலும் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், 2-வது அணுஉலையில் நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் டர்பைனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், ஆயிரம்மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 465 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளது. ஓரிரு நாட்களில் கோளாறு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
2-வது அணுஉலையில் பராமரிப்பு பணிகளுக்குப் பின்பு கடந்த 27.5.2021-ம் தேதிதான் மின்உற்பத்தி தொடங்கியது. அதற்குள், நேற்று மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.