திருப்பூர் வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட கல்லூரி சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. கடந்த மாதம் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு, 4.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாஸ்கோ நகரை சேர்ந்த சுரேந்தர் (26), நரசிம்மபிரவீன் (24) மற்றும் யாசர் அராபத் (24) ஆகியோரை போலீஸார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டதால், மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் வனிதா நேற்று உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை, கோவை மத்திய சிறையில் உள்ள மூவரிடமும் போலீஸார் வழங்கினர்.