பல்லடத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்ட கடைக்கு நேற்று சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள். 
Regional02

ஊரடங்கை மீறி செயல்பட்ட கடைகளுக்கு ‘சீல்’ :

செய்திப்பிரிவு

திருப்பூர் குமரன் சாலையில் செயல்பட்டு வந்த இரண்டு துணிக்கடைகளில் ஊரடங்கு விதிகளை மீறி, வாடிக்கையாளர்களுக்கு துணி விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதில், கடையின் பின்பக்க வாசல் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து, துணி விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இரண்டு துணிக்கடைகளுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

பல்லடத்தில் அனுமதியின்றி செயல்பட்ட, இரண்டு தனியார் நிதி நிறுவனங்கள், 3 இருசக்கர வாகன விற்பனையகங்கள், 2 துணிக்கடைகள் மற்றும் அலைபேசிக் கடைகள் என, 10-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு, பல்லடம் நகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்ததாக நகராட்சி ஆணையர் கணேசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT