கடலூரில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் தலைமையில் நடைபெற்றது. 
Regional01

கடலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க - 131 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அவர் பேசியது:

கரோனா தொற்று பரவல் அதிகம்உள்ள பகுதிகளை கண்டறிந்து காய்ச்சல்முகாம்கள் நடத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பரவலால் 131 பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாகவும், 48 வீடுகள்தடை செய்யப்பட்ட வீடுகளாகவும்அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்துஅப்பகுதியில் கிருமிநாசினி தெளித்தும், தன்னார் வலர்களை கொண்டுமக்களுக்கு தேவையான பொருட்களைவழங்கிமேலும் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் தேவைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருந்து கையிருப்புகளை உறுதிசெய்ய வேண்டும். தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் தினசரி தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. சக்திகணேசன், திட்ட இயக்குநர்பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்,இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT