Regional02

கடலூர் அதிமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் - சசிகலாவை கண்டித்து தீர்மானம் :

செய்திப்பிரிவு

குமராட்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமை தாங்கினர். அமைப் புச் செயலாளர் முருகுமாறன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராம ஜெயம், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமராட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

இதில் மாவட்ட செயலாளரும்,சிதம்பரம் சட்டமன்ற உறுப்பின ருமான கே.ஏ.பாண்டியன் பேசுகையில், சசிகலாவுடன் தொலைபேசி யில் உரையாடி அதிமுக வளர்ச் சிக்கும், புகழுக்கும் இழுக்கும், பழியும் தேடி தந்தவர்கள் அனைவரையும் அதிமுகவில் இருந்துஉடனடியாக நீக்க வேண்டும். இனி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந் தாலும் அவர்கள் அனைவர் மீதும்ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூத்த முன்னோடிகளை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி, மாவட்ட பொருளாளர் ஜானகிரா மன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர முர்த்தி, அசோகன், வாசுமுருகையன், சிவக்குமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் நகர செயலாளர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

இதில், அதிமுகவில் குழப் பத்தை ஏற்படுத்தும் சசிகலா மற்றும்அவரின் குடும்பத்தை சார்ந்தவர் களை வன்மையாக கண்டிப்பது, இவர்கள் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கி ணைப்பாளர், மூத்த முன்னோடிகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரித்து வழிமொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவுடன் தொலைபேசி யில் உரையாடிவர்களை அதிமுகவில் இருந்துநீக்க வேண்டும்.

SCROLL FOR NEXT