உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு தனித்துறை மூலம் தீர்வு காணப்பட்டு வரு கிறது.
இத்திட்டத்தில் தேனி மாவட் டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 483 மனுக்கள் பெறப்பட்டு, 222 மனுக்களுக்குத் தீர்வு காணப் பட்டுள்ளது. ஆயிரத்து 528 மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. இதர மனுக்கள் பரி சீலனையில் உள்ளன.
இத்திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
ஆட்சியர் க.வீ.முரளிதரன் பேசுகையில், தனிநபர் கோரிக்கை மனுக்களில் சாத்தியமானவற்றை உடனடியாகத் தீர்க்க வேண்டும்.
முடியாதவற்றுக்கு தெளி வான காரணத்தை மனுதாரருக்கு விளக்க வேண்டும். தொடர்ந்து இது குறித்து மனு செய்வதைத் தவிர்க்கும் வகையில், மாற்று வழியில் அவர்களின் தேவை யை நிறைவு செய்ய உரிய வழி காட்டுதலை வழங்க வேண்டும் என்றார்.