Regional02

பராமரிப்புப் பணிக்காக எரிவாயு தகன மேடை மூடல் :

செய்திப்பிரிவு

தேனி பள்ளிவாசல் தெருவில் கொட்டக்குடி ஆற்றங்கரையில் தேனி நகராட்சியின் எரிவாயு தகன மேடை உள்ளது. இது அல்லி நகரம் கிராமக் கமிட்டி சார்பில் பராமரிக்கப்படுகிறது. கரோனா பாதிப்பு அதிகரிப்பால் கடந்த 2 மாதங்களாக உயிரிழப்பு அதிகரித்தது. இதனால் தினமும் 10-க்கும் மேற்பட்ட உடல்கள் தகனம் செய்யப்பட் டன. வழக்கத்தைவிடக் கூடுதல் பிணங்கள் எரிக்கப்பட்டதால் வெப்பம் மூட்டும் பகுதியில் உள்ள செங்கல்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடலை எரிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

எனவே பராமரிப்புப் பணிகள் நேற்று முதல் தொடங்கின. இப்பணி முடிந்ததும் தொடர்ந்து செயல்படும். அதுவரை அருகில் உள்ள மயானத்தில் விறகுகள் மூலம் உடல் எரிக்கப்படும் என்று கிராம கமிட்டி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT