Regional01

குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கை வசதிக்கு இடம் தேர்வு :

செய்திப்பிரிவு

குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது, என குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

கரோனா 2-வது அலை பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிது. படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வட்டாட்சியர் உத்தரவின்படி தற்போது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கை வசதிகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. 3-வது அலை வந்தாலும் அதை சமாளிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.

SCROLL FOR NEXT