கரோனா தடுப்பூசி போடுவதற்காக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுக்கள். 
Regional01

ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போட அதிகாலையிலேயே திரண்ட மக்கள் :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 67 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 13, 14-ம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

இதையடுத்து தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 15-ம் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. கடந்த 16-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்தன.

இதையடுத்து மீண்டும் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் 67 மையங்களில் காலை 6 மணிக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதற்காக மக்கள் அதிகாலை 4 மணி முதலே தடுப்பூசி போடும் மையத்தில் குவிந்தனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார மையங்களில் வழக்கமாக 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. எனினும் நேற்று 100 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. பெரும்பாலான மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் போடப்பட்டது.

500 வியாபாரிகள்

SCROLL FOR NEXT