Regional01

வனத்துறையினருக்கு கரோனா தடுப்பூசி முகாம் :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் அஸ்தம்பட்டி தெற்கு வனச்சரகர் அலுவலக வளாகத்தில் வன ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

மாவட்ட வன அலுவலர் முருகன் மேற்பார்வையில் நடந்த முகாமில், மாவட்ட வன அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள், சேர்வராயன் தெற்கு, குரும்பப்பட்டி பூங்கா, சேர்வராயன் வடக்கு ஊழியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களின் குடும்பத்தினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

முகாமில் வன ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 200 பேர் பங்கேற்றனர். முகாமில், வனச்சரகர்கள் வெங்கடேஷ், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT