கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரத்தை அடுத்த வயலூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் காமராஜ்(25). தாதம்பட்டி முருகன் கோயில் முன் கடந்த 13-ம் தேதி காமராஜூக்கும், 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து வட் டார குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மாலதி அளித்த புகாரின் பேரில், குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து காமராஜை நேற்று கைது செய்தனர். மேலும், தலை மறைவான முருகேசன்(64), உறவினர் ஜோதி(26) ஆகி யோரை தேடி வருகின்றனர்.