Regional02

இளைஞர் கொலை: 5 பேர் கைது :

செய்திப்பிரிவு

கோட்டக்குப்பம் அருகே சின்ன கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந் தவர் செல்வகுமார் (31). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் காயங்களுடன் கிடந்தார். தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸார் செல்வகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், செல்வக் குமாரின் மைத்துனி லதா என்பவரை அதே பகுதியைச் சேர்ந்தகுப்புசாமி (27) என்பவர் காதலித் ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த செல்வகுமார், மைத்துனி லதாவை வேறு ஒருவருக்கு நிச்ச யம் செய்யுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குப்புசாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்வகுமாரை மது அருந்த முந்திரிதோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். குடிபோதையில் செல்வகுமாரை குப்புசாமி தாக்கியுள்ளார். அப்போது மயங்கி விழுந்த செல்வகுமாரை இறந்துவிட்டதாக எண்ணிய குப்புசாமி தன் நண்பர்களுடன் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் குப்புசாமி மற்றும் அவரது நண்பர்களான சின்னக்கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த விஜி (21), சேது என்ற ஜெயபிரகாஷ் (20),கன்னியப்பன் (22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT