Regional01

மருத்துவத்துறை பணியாளர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் : இந்திய மருத்துவச் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மத்திய அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவத் துறை பணியாளர்களின் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என இந்திய மருத்துவச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் ராமநாதபுரம் கிளைச் செயலாளர் டாக்டர் ஆனந்த சொக்கலிங்கம் விடுத்துள்ள அறிக்கை:

தமிழகத்தில் பதவியேற்ற குறுகிய காலத்தில் கரோனா 2-வது அலையைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்ட அரசுக்கு நன்றி. மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் அரசு மற்றும் தனியார் துறை களில் இரவு பகலாக கரோனா வுக்கு எதிரான போரில் செயல் படுகின்றனர். அவர்களின் தியாகத்தை புரியாமல் அசாம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங் களில் முன்களப் பணியாளர்கள் தாக்கப்படுகின் றனர். இதில் பெண்களும் தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சட்டத்தை போல மத்திய அரசும் சட்டம் இயற்ற வலியுறுத்தி, இந்திய மருத்துவ சங்கம் 2021 ஜூன் 18-ம் தேதியை ‘தேசிய எதிர்ப்பு தினமாக’ ‘காப்போரை காப்பீர்’ என்ற அடைமொழி மூலம் அறிவித்துள்ளது.

எனவே, மத்திய அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவத் துறை பணியாளர்கள் பாது காப்பு சட்டம் இயற்ற வேண்டும், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான உறுதியான பாதுகாப்பு வேண்டும், மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், மருத்துவப் பணியாளர்களைத் தாக்குவோர் மீது விரைவான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT