வடமதுரை அருகே வேலாயுதம்பாளையத்தில் பயனாளி வசிக்கும் இடத்துக்கே சென்று இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கிய அமைச்சர் அர.சக்கரபாணி. 
Regional03

அரசு கொள்முதல் செய்யும் நெல்லுக்கு உடனடி பணம் : அமைச்சர் அர.சக்கரபாணி உறுதி

செய்திப்பிரிவு

அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டி கிராமத்தில் கரோனா நிவாரண நிதி, 14 வகை மளிகைப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கூறும் இடங்களில் எல்லாம் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யும் நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். கடந்த காலத்தில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை ஐந்து முதல் ஆறு நாட்கள் காக்க வைத்தனர்.

இனிமேல் அந்த நிலைமை ஏற்படக் கூடாது. 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்து பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்களுக்கு தரமான அரிசி கொடுக்க வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார், என்றார்.

இருப்பிடம் தேடிச்சென்று வீட்டுமனைப் பட்டா

SCROLL FOR NEXT