Regional03

இலங்கையிலிருந்து - கள்ளப்படகில் வந்தோருக்கு உதவிய 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

இலங்கையிலிருந்து கள்ளப்படகில் தமிழகம் வந்த 14 பேருக்கு உதவிய மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த 3 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து 14 பேர் கள்ளப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடல் பகுதிக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வந்துள்ளனர். பின்னர், 14 பேரும் மங்களூருக்கு தப்பிச் சென்றனர். அங்கிருந்து ஏஜென்ட்கள் உதவியுடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டனர். அவர்களை மங்களூர் போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த 14 பேர், மரைக்காயர்பட்டினத்தில் இருந்து மங்களூருக்குச் செல்ல உதவியதாக மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் முகைதீன் (43), ரசூல் (29), சதாம் (31) ஆகியோரை சென்னை கியூ பிரிவு கூடுதல் எஸ்.பி பாலாஜி தலைமையிலான போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய முக்கிய நபரான இம்ரான்கான் உள்ளிட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT