‘கரோனா தடுப்பு பணியில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட வேண்டும்,’ என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலான அனைவரையும் கரோனா இரண்டாம் அலை பரவலில் இருந்து காப்பாற்றிட தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கரோனா தடுப்பு குழுக்களுக்கு உதவிட தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது பெயர் மற்றும் முகவரி அடங்கிய தகவல்களை மாநில குழுவிற்கான tngocoordination@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மேலும் மாவட்ட அளவிலான பதிவிற்கு https://ucc.uhcitp.in/ngoregistrationஎன்ற இணையத்திலும் பதிவு செய்து பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
மேலும், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது முழு விவரங்களுடன் தங்களால் இயன்ற பங்களிப்பு குறித்த தகவல்களை பதிவு செய்து கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் கரோனா தடுப்பு குழுக்களுக்கு உதவிட வரவேற்கப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு அறை எண் 126, முதல்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் என்ற முகவரியிலும், 0427 – 2413213, dswo.slm1@gmail.com என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.