Regional01

கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

பள்ளிபாளையம் கொக்கராயன் பேட்டை பகுதியில் போலீஸார் ரோந்து சென்ற போது, பாரதி நகரைச் சேர்ந்த சக்திவேல் (34) என்பவர், தனது வீட்டின் முன் நாட்டுத் துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்தார். சக்திவேல் மற்றும் அங்கிருந்த கோடீஸ்வரன் (33) என்பவர்களிடம் போலீீஸார் விசாரித்தனர்.

இதில், இருவரும் மதுபான பாட்டில்களை கள்ளச்சந்தையில் வாங்கி விற்றது தெரியவந்தது. மேலும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, நரிக்குறவர் ஒருவரிடம் இருந்து அனுமதி பெறாத நாட்டுத்துப்பாக்கியை வாங்கி யதாகவும் சக்திவேல் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 51 மதுபான பாட்டில்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT