Regional01

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் - பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்தது :

செய்திப்பிரிவு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு, நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் இரு நாட்களாக சராசரியாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளதால், அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த 16-ம் தேதியன்று காலை 89.21 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் நேற்று மாலை 91.51அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 8237 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 200 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 22.58 டிஎம்சி ஆக உள்ளது.

SCROLL FOR NEXT