ஈரோடு அக்னி ஸ்டீல்ஸ் பணி யாளர்கள் தங்களது ஒரு நாள் சம்பளமான ரூ.5 லட்சத்துக்கான காசோலையை, கரோனா நிவாரணமாக அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கினர்.
ஈரோடு அக்னி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங் களது ஒரு நாள் சம்பளமான ரூ.5 லட்சத்தை கரோனா நிவாரணத் திற்கு வழங்க முடிவு செய்தனர்.
இதையடுத்து அக்னி ஸ்டீல்ஸ் பொது மேலாளர்கள் சீனிவாசன், ஜெயக்குமார், செயல் இயக்குநர்கள் ராம்ஜி, சக்தி கணேஷ் மற்றும் இளங்கோ ஆகியோர், ஈரோட்டில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். கடந்த மாதம் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.