மாணவி சிருஷ்டிகா 
Regional02

தூத்துக்குடி மாணவி வரைந்த ஓவியத்துக்கு மாநில முதல் பரிசு :

செய்திப்பிரிவு

குழந்தைத் தொழிலாளர் குறித்த ஓவியப்போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவி மாநில அளவில் முதல் பரிசை வென்றுள்ளார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் விதமாக, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அவிநாசியை சேர்ந்த சோசியல் இக்குவாலிட்டி மற்றும் டெவலப்மெண்ட் நிறுவனம், ஆன்லைன் ஓவியப் போட்டியை நடத்தியது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி கெ.சிருஷ்டிகா வரைந்த ஓவியம், மாநில அளவில் முதல் பரிசை பெற்றது. மாணவியை, பள்ளி நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT