திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாளையங்கோட்டையில் தூய சவேரியார் கல்லூரியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அப்துல் வகாப் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இங்கு மட்டும் 100 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
இதுபோல விஎம்எஸ் மகால், ஆட்சியர் அலுவலகம், நெல்லை பத்திரிகையாளர் மன்றம், ஆர்யாஸ் ஹோட்டல், பேட்டை ஜாமியா பள்ளிவாசல், சமாதானபுரம் னிவாச மகால், திருமால் நகர் தொழிலாளர் துறை அலுவலகம், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. சிறப்பு முகாம்கள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
89,350 பேருக்கு தடுப்பூசி