திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள நெடுங் கூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 8-ம் தேதி இரவு அலுவலக அறையை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த கணினி உள்ளிட்ட சில பொருட்களைத் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் விசாரித்து வந்த நிலையில், 14-ம் தேதி இரவு மீண்டும் பள்ளியில் மேலும் சில கணினி உபகரணங்கள் திருடு போயின.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பள்ளிக்குள் புகுந்த சிலர் அங்குள்ள இரும்புப் பொருட்களை திருட முயற்சித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.