Regional01

திருச்சியில் - ஜூன் 29-ல் மண்டல அளவில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம் :

செய்திப்பிரிவு

திருச்சியில் ஜூன் 29-ம் தேதி மண்டல அளவில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடைபெற வுள்ளது. இதுதொடர்பாக அஞ்சல் துறை மத்திய மண்டலத் தலைவர் அ.கோவிந்தராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் உள்ள மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில், ஜூன் 29-ம் தேதி காலை 10.30 மணியளவில் மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. எனவே, அஞ்சல் சேவை தொடர்பான குறைகளை ஜூன் 25-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

கோட்ட அளவில் ஏற்கெனவே புகார் மனு கொடுத்து, அதற்கு அஞ்சல் கோட்டக் கண்காணிப் பாளர் அளித்த பதிலில் திருப்தி அடையாதவர்கள் மட்டுமே இந்த குறைதீர் முகாமுக்கு குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். புதிய புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது.

புகார்தாரர்கள் தங்களது குறைகளை, ‘ச.சுவாதி மதுரிமா, உதவி இயக்குநர் (காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி-1’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் உறையின் முன்பக்க மேற்பகுதியில் ‘அஞ்சல் சேவை குறைதீர் முகாம்- ஜூன் 2021’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

SCROLL FOR NEXT