கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலவகத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நேற்று அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:
கரூர் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் சிறிய அளவில் கடைகளை நடத்தி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக முடிதிருத்தும் கடைகளை திறக்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து, சிரமப்பட்டு வருகிறோம்.
விரைவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, முடிதிருத்தும் கடைகளை திறக்க அரசு அனுமதியளிக்கும்போது, கரோனா அச்சமின்றி பணியாற்றும் வகையில், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி, அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அலுவலகத்திலும் இதுதொடர்பாக நேற்று மனு அளித்துள்ளனர்.