Regional01

மத்திய அரசைக் கண்டித்து 6 இடங்களில் 3 நாள் போராட்டம் : கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (லெனினிஸ்ட்) கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடியில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்துபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்டச் செயலாளர் அகமது இக்பால், தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் கலந்துகொண்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் அடுத்த ஆறு மாத காலத்துக்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரத்திலும், 29-ம் தேதி கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளத்திலும், 30-ம் தேதி ஏரல் மற்றும் திருச்செந்தூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT