Regional01

மருத்துவமனைகளில் இருந்து உருவாகும் - மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் விதிமீறல் : மக்கள் புகார்; ஆட்சியர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவமனைகளில் இருந்து உருவாகும் மருத்துவ கழிவு களை முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும். தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமிக்க கூடாது. இருப்பினும், மருத்துவ கழிவுகள் சாலைகள், ஆற்றங்கரைகள், நீர் நிலைகள் பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டப்படுவது தொடர்பாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன. கரோனா நோய் தொற்று சூழலில் மருத்துவ கழிவுகளை முறை யில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அனைத்து மருத்துவமனைகள், கரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து அந்தந்த பகுதிகளில் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப் பட்டுள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண் டும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT