ஆண்டுதோறும் ஜுன் 14-ம் தேதி உலக ரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ரத்த தானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஏடிஎஸ்பிக்கள் கோபி, கார்த்திகேயன், இளங்கோவன் கலந்துகொண்டனர். இந்த முகாமில் காவல் துறையினர் 200 பேர் ரத்ததானம் செய்தனர்.