Regional02

புதிதாக 364 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

செய்திப்பிரிவு

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக 364 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் தொற்று பாதிப்பு நிலை 100-க்கும் கீழ் உள்ளது. தற்போது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றுக்கு இதுவரை 940 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வில் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வரவேண்டாம். இதனால், மீண்டும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் அனைவரும் ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 155 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். சிகிச்சை பலன் அளிக் காமல் நேற்று 15 பேர் உயிரிழந் துள்ளனர். 671 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

திருவண்ணாமலை

SCROLL FOR NEXT