Regional02

‘சிரமம் இன்றி மக்கள் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு தேவை’ :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சிரமமின்றி கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் சுகாதாரப் பணிகள்துணை இயக்குநர் அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று அளித்த மனுவில், "சுகாதாரத் துறை சார்பில் தற்போது கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், நெருப்பெரிச்சல் ஜி.என். கார்டன் பகுதியில் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் அண்ணா நகர், பாண்டியன் நகர், பூலுவப்பட்டி பகுதிகளில் தடுப்பூசி செலுத்த முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேற்கண்ட பகுதி மக்கள் எளிமையான முறையிலும், சிரமம் இன்றியும் தடுப்பூசி செலுத்தும் வகையில் பாண்டியன் நகர், அண்ணா நகர், பூலுவப்பட்டி அரசு பள்ளிகளில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT