Regional03

சேலம் மாவட்டத்தில் 598 பேருக்கு கரோனா - ஈரோட்டில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைகிறது :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் 598 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 125 பேரும், வட்டார அளவில் வீரபாண்டியில் 46, எடப்பாடியில் 35, பெத்தநாயக்கன்பாளையத்தில் 22, நங்கவள்ளியில் 21, தாரமங்கலம், தலைவாசலில் தலா 19, சேலம், ஓமலூர், கெங்கவல்லியில் தலா 17, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடியில் தலா 16, அயோத்தியாப்பட்டணம், கொளத்தூர், மேச்சேரியில் தலா 12, மேட்டூர் நகராட்சியில் 14 பேர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 124 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 598 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

கரோனா தொற்று பரவலில் கோவைக்கு அடுத்து இரண்டாமிடத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்த தொடர் நடவடிக்கைகளால் ஈரோட்டில் தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது.

சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரோட்டில் நேற்று 1041 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

1239 பேர் குணமடைந்த நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9709 ஆக குறைந்துள்ளது.

SCROLL FOR NEXT