டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலி வடக்குத்தில் பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். 
Regional02

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - டாஸ்மாக் திறக்கப்பட்டதை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

டாஸ்மாக் திறக்கப்பட்டதை கண்டித்து விழுப்புரம், கடலூர்மாவட்டங்களில் கருப்புக்கொடி யுடன் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரோனா தொற்று முழுமை யாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் பாமகவினர் கருப்புக் கொடியுடன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பாமக வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஜெகன் தலைமையில் நெய்வேலி வடக்குத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமூக முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் குறளமுதன், மாவட்ட படைப்பாளிகள் பேரியக்க செய்தி தொடர்பாளர் வேணுநாதன், யோகலட்சுமி, ஜெயசுதாஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது போல சிதம்பரம் செங்கட்டன் தெருவில் பாமக நகர தலைவர் ஞானகுரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதே போல் மயிலம் எம்எல்ஏ சிவகுமார் தன் குடும்பத்தாருடன் நேற்று விழுப்புரத்தில் உள்ளஅவரது வீட்டின் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையிலும், விழுப்புரத்தில் உள்ள பாமக அலுவலகம் முன்பு மாநில துணைப்பொதுச் செயலாளர் தங்கஜோதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மாநில அமைப்பு செயலாளர் பழனிவேல், நிர்வாகிகள் மணிமாறன், செல்வம், விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் விழுப்புரம் மாவட் டத்தில் சுமார் 200 இடங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி

புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

SCROLL FOR NEXT