சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகிலுள்ள தெருவில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் புதுவளைவு கிராமத்தை சேர்ந்த சரவணன்(28) என்பவர் வீடு எடுத்து தங்கி இருந்தார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுப்புற பகுதிகளிலுள்ள மருந்தகங்களுக்கு மருந்து, மாத்திரை உள்ளிட்ட பொருட்களை மொத்த விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை இவர் வீட்டில் தூக்கில் தொங்குவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சேத்தியாத்தோப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சரவணன் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.