Regional01

வட்டாட்சியர் ஜீப்-லாரி மோதி விபத்து : கிராம உதவியாளர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை வட்டாட்சியர் ஜீப்பும் லாரியும் மோதிக்கொண்ட விப த்தில் கிராம உதவியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

அருப்புக்கோட்டை வட்டாட் சியராக விருதுநகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் பணிகளை முடித்துகொண்டு தனது ஜீப்பில் விருதுநகர் வந்தார். ஜீப்பை சின்னபுளியம்பட்டியைச் சேர்ந்த கிராம உதவியாளரும் மாற்று ஓட்டுநருமான பூமாறன் ஓட்டி வந்தார். அவருடன் மற்றொரு ஓட்டுநர் மருதுபாண்டியனும் வந் துள்ளார்.

விருதுநகரில் வட்டாசியர் ரவிச்சந்திரனை இறக்கிவி ட்டுவிட்டு மீண்டும் அருப்புக் கோட்டை திரும்பிச் செல்லும் வழியில் பாலவநத்தம் அருகே எதிரே வந்த லாரியும் வட்டாட் சியரின் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஜீப்பை ஓட்டிச்சென்ற பூமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு ஓட்டு நரான மருதுபாண்டியன் பலத்த காயமடைந்தார்.

தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த மருது பாண்டியனுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT