Regional01

சிவகங்கை நகராட்சி குப்பை கிடங்கில் தீ :

செய்திப்பிரிவு

சிவகங்கை நகரில் தினமும் 21 டன் குப்பை சேகரமாகிறது. அவை சுந்தரநடப்பு அருகே குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து இந்த கிடங்கில் தற்போது குப்பை கொட்டப்படுவதில்லை.எனினும் ஏற்கெனவே குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையில் நேற்று முன்தினம் தீ பரவியது.

தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். புகையால் இரவில் தூங்க முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்தனர்.

SCROLL FOR NEXT