சிவகங்கை நகராட்சியில் அறிவொளிப் பூங்கா, நகராட்சிப் பூங்கா, ராமச்சந்திரா பூங்கா, மீனாட்சி நகர் பூங்கா, பாரதி பூங்கா உட்பட 25 பூங்காக்கள் உள்ளன.
இந்நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சில பூங்காக்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளன. மற்றவை பயன்பாடின்றி, இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. பூங்காக்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக மாறியுள்ளன. சுற்றுச் சுவர்கள் சேதமடைந்துள்ளன. பூங்காக்களை மீட்டு, சீரமைக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.