தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் வைத்து மது பானம்விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 91 மதுபான பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள தட்டப்பாறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழச்செக்காரக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்து, மதுபான பாட்டில்களை ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
போலீஸார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கீழ செக்காரக்குடி மேற்கு தெருவைச் சேர்ந்த ஆதிமூலம் (58) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 92 மதுபான பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.