திருப்பத்தூரில் நேற்று கரோனா நிவாரண பொருட்களை வழங்கிய சார் ஆட்சியர் (பொறுப்பு) வில்சன் ராஜசேகர். 
Regional02

கரோனாவால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு - நிவாரண பொருட்கள் வழங்கல் :

செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் கரோனா தொற் றால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங் களுக்கு நிவாரணப்பொருட்களை சார் ஆட்சியர் (பொறுப்பு) வில்சன் ராஜசேகர் நேற்று வழங்கினார்.

திருப்பத்தூர் சகாய அன்னை ஆலயத்தில் உள்ள ஆக்சிலியம் தொழிற் பயிற்சி மையம் சார்பில், கரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சகாய அன்னை ஆலயத்தின் அருட்தந்தை டேவிட் ஜோப் தலைமை வகித்தார். திருப்பத்தூர் சார் ஆட்சியர் (பொறுப்பு) வில்சன்ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 100 குடும்பங்களுக்கு இலவச அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறி மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

இதில், திருப்பத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இதில், சென்னை தொன்போஸ்கோ சுரபி அருட்தந்தை அல்போன்ஸ் அருளானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT